Showing posts with label நிச்சயதார்த்தம். Show all posts
Showing posts with label நிச்சயதார்த்தம். Show all posts

Sunday, 21 December 2008

மறக்க முடியுமா?

மறக்க முடியுமா?

தங்கை பிள்ளையின் நிச்சயதார்த்தம்!

மண்டபம் முழுதும், நட்புகள், சொந்த பந்தங்களால் நிறைந்திருக்கிறது!

பொண்ணும் பிள்ளையும் பார்த்துக் கொள்ளாமல், பெற்றோர் பேசி, மணமக்களின் சம்மதத்துடன், நடை பெறப் போகும் திருமணத்தை, நிச்சயிக்கும் அர்த்தமுள்ள மணநிகழ்வு!

மணமகன் திருமணத்துக்குத்தான் வரமுடியும். அமெரிக்காவில் வேலை! (கைபேசிகள் பேசிக் கொள்ளும்!)

பெண் மீனாட்சியாய் அலங்காரத்தில் ஜொலித்தாள்! மதுரைப் பெண்!

நீலப் பட்டுப் புடவையில், ரோஜா மாலையில், அழகு மிளிர்ந்தாள்!

நான் எங்கோ, மண்டப ஹாலில் எல்லோருக்கும் பின்னால் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்!

நிச்சயதார்த்த சம்பிரதாயம் முடிந்து, பெண் மண மேடையை விட்டு வந்து கொண்டிருந்தாள்!

எங்கே வருகிறாள்?

ஆமாம்! என்னை நோக்கி வருகிறாள்!

என்னிடம் வந்து "பெரிம்மா! உங்களுக்கு பாடி காட்டறேன்! அவர் சொல்லியிருக்கிறார்! உங்களுக்குப் பாட்டுன்னா ரொம்பப் பிடிக்குமாமே!"

சொல்லிவிட்டு, என்னை நமஸ்கரித்து விட்டு, நிமிர்ந்தாள்!

நான் அழுதுவிட்டேன்!

அந்த அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லை!

அப்படியே அழுதுவிட்டேன்!

இந்து! ஆமாம் நாட்டுப்பெண் பேர்! மிக அருமையாகப் பாடி அசத்தினாள்!

மனம் குளிரக் கேட்டு மகிழ்ந்தேன்!

இந்த சுவையான தருணத்தை மறக்கமுடியுமா?