Wednesday 29 June, 2011

ஆடையே அணி!

எண்ணங்களை எழுதாமல்,
வருஷம் உருண்டோடி விட்டது.....
எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் உள்ளத்தில்...
நினைவுகளாய் நிழலாடிய சிலதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஐம்பது,அறுபது ஆண்டுகளுக்கு முன்னால்,
கைராட்டையில் நெய்தக் கதருக்குப் புனிதமான மவுசு
இருந்தது!
அப்புறம், கைத்தறி வேஷ்டி வகைகள்,புடவை வகைகள்...



பிறந்த நாளுக்குக் காசுமாலைச் சட்டை அணிந்த நினைவு இருக்கு!
முதல் பிறந்த நாளுக்கு வாங்கியதை
ஐந்து வயதுவரை பாவாடைக்கு மேல்சட்டையாய் அணிந்திருக்கேன்.

சம்கி வேலைப்பாடு செய்த அழகழகான வண்ணத்தில்,
ரொஜா,நீலம்,பச்சை,மேகவண்ணம்,மயில்கழுத்துவண்ணம்
போன்ற பல வண்ணங்களில்...

சீட்டியில் விதவிதமான கவுன்கள்,பாவாடைகள்,சட்டைகள்
அணியலாம்.(சிங்கப்பூர் சீட்டி சாயம் போகாது!
அழகானப் பூக்கள் நிறைந்திருக்கும்!)

காடா,கெட்டியா மொத்தமாக இருக்கும்.
ஏணை ரெட்டு என்று இருமுனைகளும் தைக்கப்பட்டு
குழந்தைக்குத் 'தூளி'யாக அரவணைக்கும்!
உள்ளாடகள் இருபாலாரும் அணிவதும் 'காடா'த் துணியில்.
மல்லுத்துணியும் உபயோகத்தில் வந்தது.
'பாப்ளின்' என்றொரு துணிவகை!பல கலர்களில் இருக்கும்!
உள்ளாடை,தலையணை உறைகள் இதற்குப் பயன்பட்டது!
'லாங்கிலாத்' என்றொருவகையுண்டு.

ரவிக்கை,என்பது பெண்களணியும் ஜாக்கெட் அதாவது
சோலியாக உருவெடுத்தது!
சின்னப்பூக்கள்,பொடிக் கட்டங்கள், கொஞ்சம் பெரிய கட்டங்க்ள்,
புள்ளிகள், இவையெல்லாம் நிறைந்த விதவித வண்ணத்தில்
பைப்பிங் செய்து தைத்த ரவிக்கைகள்!சில்க்கிலும்,
சீட்டியிலும்!
பின்பு 'லான்'என்னும் துணிவகை வந்தது!
பல வண்ணங்களாக, சோலிகளில் மிளிர்ந்தன!
'லினன்'என்று ஒருவகை! வண்ணவண்ணப் பூக்களுடன் பலகலர்களில்
வந்தது.பெண்குழந்தைகள் பாவாடை,மேல்சட்டையில்!
துவள,மிருதுவாக,இருக்கும்!

ஜார்ஜெட்,வெல்வெட்,நைலான்,நைலெx போன்ற வகைகளும்
புடவைகளாகவும்,
குழந்தைகள் ஆடைகளாகவும் உபயோகத்தில்
இருந்தன!

தொடரும்...