Tuesday, 30 December 2008

Happy new year கொண்டாடுவோம்!!!!!!!!!!!!

புத்தாண்டு..
இப்பொ எல்லாம் party, dance get together நு life style மாறிடுத்து..

ஆனா.. அதெல்லாம் தெரியாத என் சின்ன வயதில்.. புது வருஷம் கொண்டாட்டமே வேற..

தாத்தா.. டிசம்பர் 31 ம் தேதியே.. newspaper எல்லாம் பேப்பர் காரனுக்கு போட அழகா எடுத்து வெச்சு..
ஜனவரி 1ம் தேதி பேப்பர் வரிசையா , மடிப்பு கலையாமல் வைக்க இடம் பண்ணிடுவார்..


அடுத்தது காலண்டர் எல்லாம் புது வாசனையோடு அந்தந்த ஆணியில் தொங்க விடுவார்..
சாமி காலண்டர், பஞ்சாங்க காலண்டர், scenery இருக்கிற காலண்டர் எல்லாம் ஒண்ணாம் தேதியை வரவேற்கும்


daily sheet ராத்திரி தூங்கும் முன்னாடியே ஒண்ணாம் தேதி கிழிக்கபட்டு விடியலுக்காக காத்திருக்கும் ...

ஜனவரி ஒண்ணு ... சீக்கிரமே எழுந்து குளித்து பூஜை பண்ணிவிட்டு ..
வெள்ளிக் காசு ,தங்க காசு அதோட பிள்ளையார் , லக்ஷ்மி சரஸ்வதி படமும் கையில் வெச்சுண்டு..

அதில் தான் கண் முழிக்கணும்னு எல்லாரும் நு .. அவருக்கு ஒரு system..
வருஷம் பூரா எல்லா நன்மைகளும் கிடைக்கணும்னு அவரோட வாஞ்சை இப்போ நினைத்தாலும்..இனிமையா இருக்கு..

பாட்டி.. தன் திறமையை சமையலில் காட்டுவா..
எல்லாரும் கூடி உட்கார்ந்து சந்தோஷமா போன வருஷம் நடந்த சம்பவங்களை அசைபோட்டு..

ஆஹா..
அந்த இயற்கையான கொண்டாட்டம் .. இப்பவும் என் மனதில் பசுமையா இருக்கு..

வாழ்க்கை ஓட்டத்தில்.. எல்லாம் மாறினாலும்..
இந்த நினைவுகள் எல்லாம் தான் மனதில் என்றும் நிலைத்து இருக்கு என்பதில் சந்தேகமே இல்லை..


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!

Sunday, 21 December 2008

மறக்க முடியுமா?

மறக்க முடியுமா?

தங்கை பிள்ளையின் நிச்சயதார்த்தம்!

மண்டபம் முழுதும், நட்புகள், சொந்த பந்தங்களால் நிறைந்திருக்கிறது!

பொண்ணும் பிள்ளையும் பார்த்துக் கொள்ளாமல், பெற்றோர் பேசி, மணமக்களின் சம்மதத்துடன், நடை பெறப் போகும் திருமணத்தை, நிச்சயிக்கும் அர்த்தமுள்ள மணநிகழ்வு!

மணமகன் திருமணத்துக்குத்தான் வரமுடியும். அமெரிக்காவில் வேலை! (கைபேசிகள் பேசிக் கொள்ளும்!)

பெண் மீனாட்சியாய் அலங்காரத்தில் ஜொலித்தாள்! மதுரைப் பெண்!

நீலப் பட்டுப் புடவையில், ரோஜா மாலையில், அழகு மிளிர்ந்தாள்!

நான் எங்கோ, மண்டப ஹாலில் எல்லோருக்கும் பின்னால் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்!

நிச்சயதார்த்த சம்பிரதாயம் முடிந்து, பெண் மண மேடையை விட்டு வந்து கொண்டிருந்தாள்!

எங்கே வருகிறாள்?

ஆமாம்! என்னை நோக்கி வருகிறாள்!

என்னிடம் வந்து "பெரிம்மா! உங்களுக்கு பாடி காட்டறேன்! அவர் சொல்லியிருக்கிறார்! உங்களுக்குப் பாட்டுன்னா ரொம்பப் பிடிக்குமாமே!"

சொல்லிவிட்டு, என்னை நமஸ்கரித்து விட்டு, நிமிர்ந்தாள்!

நான் அழுதுவிட்டேன்!

அந்த அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லை!

அப்படியே அழுதுவிட்டேன்!

இந்து! ஆமாம் நாட்டுப்பெண் பேர்! மிக அருமையாகப் பாடி அசத்தினாள்!

மனம் குளிரக் கேட்டு மகிழ்ந்தேன்!

இந்த சுவையான தருணத்தை மறக்கமுடியுமா?