அன்பு மகனே!
பாட்டியைப் பற்றியும், பாடல்களைப் பற்றியுமுள்ள உன்னுடைய ஞாபக சக்திக்கு என் Hats off!
தலை தாழ்த்திப் பணிகிறேன்!
எனக்கு நீ சொல்லசொல்ல பாட்டிக் கூறியது நினைவு வருகிறது!
ஆங்கிலேயர் ஆட்சி காலம்.
பாட்டியோட அப்பா குமரலிங்கம் என்னும் ஊரில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
("கே"ஊர்கள்னு சொல்லி ஞாபகம்) கணியூர், கடத்தூர், கொழுமம், கொத்தாம்பாடி, குமரலிங்கம். காரத்தொழு
அங்கு ஒரு தமிழ் புலவர் அப்போதே உடனே கவி எழுதியதுதான் இந்த "சர்வா டம்ப்ரமாம் குமரலிங்கம் அங்கு தங்கும் மாணாக்கர்கள் கல்விச்சங்கம்"என்ற பாடல்!
இங்லிஷ் நோட்டு மெட்டுலே பாடின பாடல் இது!
(இந்த டியூனை கிடாரிலோ,வயலினிலோ நீ இசைக்கலாமே!)
பாட்டியின் அப்பா பெயர் ராமசாமி.
பாட்டியின் அப்பா ராமுப்பா, கூடப் பிறந்தவர்கள் உம்மாச்சிப்பா, காப்பிப்பா, ஒரு அத்தை லக்ஷ்மி(அப்பிச்சியம்மா)
ஆசையாய் குழந்தைகளுக்கு பட்சணம் (குழந்தை மொழியில்
அப்பிச்சி என்றால் பட்சணம் என்று பொருள்) செய்து தருவதால்!
கூட்டுக் குடும்பம்! பெரிய குடும்பம்!
பாத்திரம் நமக்கு அடிமையா? நாம் பாத்திரத்துக்கு அடிமையா? என்னும் பாட்டியின் பேச்சு, பாத்திரங்கள் பற்றாமையால் மட்டும் அல்ல! தேவைக்கு பயன் படித்துவோம்! என்ற எண்ணத்தில் கூறியது.
(பாட்டி இரண்டாம் வகுப்பு படித்து இருக்கிறாள். பாட்டிக்கு ஒன்பது வயசில் கல்யாணம். தாத்தாக்கு அப்போ 15 வயது)
தத்துவப் பாடலில் இந்தப் பாடலும்:
"எச்சில் எச்சில் என்கிறீர்! ஏதுங்கெட்ட மூடரே!
பொறந்தபிள்ளை எச்சிலோ? கறந்த பாலும் எச்சிலோ!"
ராமநாடகக் கீர்த்தனைகளையும், தேசிங்கு ராஜா கதை பாட்டுகளையும்,
"நாயகர் பட்சமடி! எனக்கது ஆயிரம் லட்சமடி!"
கூழேயானாலும் எனக்கது தேனே!
கொண்டவனிருக்கக் குறையென்ன மானே!"
போன்ற வேதநாயகம் பிள்ளையின் பாடல்களையும், சித்தர் பாடல்களையும், கவிகுஞ்சரர், சிவன், கோபாலகிருஷ்ண பாரதியார், போன்றோரின் பாடல்களையும் பாடி, தத்துவமும், தேச பக்தியும், பக்தியும் நிறைந்த உள்ளத்தோடு வாழ்ந்தவள்.
"இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழிலுடையோன்
எங்கள் தமிழன்!மேலாம்(எழிலுடையோன்)
கந்தமூலமே புசிக்கநேரினும் கடமை தவறவே
மாட்டான் தமிழன்!"
(எம்.எம்.மாரியப்பா பாடியது என நினைக்கிறென்)
தாரமங்கலம் டூரிங் டாக்கிஸ் கொட்டகையில் இந்தப்
பாடல்கள் ஒலிக்கும்! கேட்கும் தூரத்தில் வீடு.
கே.ஆர்.ராமசாமி பாடிய பாடல்களை அம்மா ரசித்துப் பாடுவாள்.
"இன்னமும் பராமுகம் ஏனம்மா! ஏழை
இடர்தவிர்ப்பதுன் பாரம்மா!"
"நீதானல்லாமல் துணை யார்!
மாதா பிதாவும் நீயே!"
வானொலியில் 50 களின் கடைசியில் பல மெல்லிசைப் பாடல்கள் அருமையாக இருக்கும்!
சுந்தரியும்,உமாவும் நினைவு கூர்ந்து சொன்ன பாடல்கள்! யார் எழுதிய பாடல் தெரியவில்லை! அருமையான பாடல்!
"இதய தாபம் தீருமா!இறைவா
எனது வேட்கை மாறுமா?
உடலின் நடிப்பும் ஓய்ந்திடவில்லை!
உயிரின் துடிப்பும் சாய்ந்திடவில்லை
நினைவுக்கப்பால் நெடுவழ ஓடி
கனவுக்கப்பால் கண்டது கோடி!
நிலையின்றி நானும் அழுதேன் தேடி!
பயிலும் வினையும் பண்படவில்லை!
பாடி அழுதும் உன்கண்படவில்லை!
இன்னொரு பாடல்..
கதிரவன் கிரணக் கையால் தொழுவான்!
சுதியோடு புட்கள் ஆடிப்பாடி துதி செய்யும்!
பொதியலர் தூவிப் போற்றும் தருக்களெல்லாம்
பூதம் தம்தொழில் செய் தேற்றும்!
அதிர்கடல் தனொலியால் வாழ்த்தும்!
அகமே! நீ வாழ்த்தாததென்னே...."
70 களில் வானொலிப் பாட்டொன்று,
"அஞ்சலி செய்தோம் பாரத தேவி!
அணுவொடுப் பயிலத் தேர்ந்தவளே!
சஞ்சலம் தீர்க்கும் செஞ்சுடற் செல்வி
சமத்துவ நெறியைச் சார்ந்தவளே!"
எஸ்.ஜானகி பாடிய பாடல். குமார் பாட்டுப் போட்டிக்கு பாடினான்.
(பொக்ரானில் அணு பரிசோதனை இந்திராகாந்தி ஆட்சிக் காலம்)
இந்தப் பாடல்கள் இப்போது கேட்கக் கிடைக்குமா?
இன்னும் உன் பள்ளிநாள், கல்லூரி நாள், நினைவுகளைப்
பகிர்ந்து கொள்ளேன்.
வாழ்க வளமுடன்!
Tuesday, 20 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஆமாம்.. எங்கள் வீட்டில் நான் பிறந்த சயயம்தான் ரேடியோ பெட்டி (UMS) வாங்கினார் எனது தந்தை.. மதியம் உணவு உண்ணும் சமயத்தில் செய்திகளுக்குப்பிறகு வரும் தேச பக்திப் பாடல்கள் ஒலிபரப்புவார்கள்.திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இயற்றிய பாடல்கள் டி. ஆர். பாப்பா இசையில் எம் பி. ஸ்ரீநிவாஸ் இசையில் சேயோன் மற்றும் குமார் என்பவர் இசையில் அநேகம் பாடல்கள் கேட்டிருக்கிறேன். பிற மொழிகளில் கூட பாடல்கள் சேர்ந்திசை பாடல்கள் ஒலிபரப்புவார்கள்.. இப்பொழுதெல்லாம் அதே நிலை இருக்கிறதா எனத் தெரியவில்லை. எனக்கும் ஐம்பது வயதைத்தாண்டி போய்க்கொண்டு இருக்கிறது.
Post a Comment