Friday 5 September, 2008

இசை எண்ணங்கள் !

..
இசை எண்ணங்களை தொடர்கிறேன் !

ரேடியோவில் பாட்டுக் கேட்டு மகிழலாம்!

ரேடியோ, எல்லோரும் வாங்க முடியாது!

யாரோ கொஞ்சம் பேரால் தான் வாங்க முடியும்.

இப்போ நான் சொல்லப் போற நிகழ்ச்சிக்கும், ரேடியோவிற்கும் சம்மந்தம் உண்டு.

என் தம்பி கண்ணனுக்கு (வைத்த பெயர் சிவாம்ருதம். அப்பா மட்டும்தான் அவனை சிவாம்ருதம்!னு கூப்பிடுவார்) 15 வயசிலே ஜுரம் வந்து, நடக்க முடியாமே கால் மடங்கிடுத்து! வலது கையும் பாதிச்சுடுத்து!

பள்ளித் திறந்ததும் 11 வகுப்பு செல்லணும். இப்படி ஆகிவிட்டது! பள்ளி செல்ல முடியாது.

அப்பா அவனுக்குன்னு ஒரு "ரேடியோ" வாங்கினார்!

பாட்டுக் கேட்பான்! கொன்னக்கோல் கொனுப்பிப்பான்!(சொல்லுவான்)

அவனுக்குப் பிடித்த நிகழ்ச்சியைக் கேட்பான்!

விவேகானந்தரின் ராஜ யோகம், ஞான யோகம், கர்ம யோகம்...இப்பிடி எல்லா நூல்களையும் தமிழில் ஆங்கிலத்தில் , கிடைத்ததை விடாது தேடி தேடி படித்தான்

சகோதரிகள் உமா, சுந்தரி பக்கத்து வீட்டு சோமு, இன்னும் நூலகரும் பரிவுடன் கொடுத்து உதவுவார்!

அவ்விதமே இராமகிருஷ்ணர், அன்னை சாரதா, குரு பாயிக்கள் இவர்களை அறிந்து கொள்ள நிறைய புத்தகங்கள் படித்தான்.

சில கீர்த்தைனகள் இராமகிருஷ்ணர் மீது செய்து, ராகம், தாளம் இவற்றோடு பாடுவான்.

அப்படியே தன்னை வளர்த்திக் கொண்டான்.

இன்னொரு சமயம் சிவாம்ருதத்தைப் பற்றி சொல்கிறேன்.

ரேடியோ, கண்ணனுக்காக வாங்கினது ...

"நேஷனல் எக்கோ" ரேடியோவின் பெயர்!

நாங்களும் கேட்டு மகிழ முடிஞ்சது!

ரேடியோ சிலோன்....மறக்க முடியுமா?

நாடகங்கள், சொற்பொழிவுகள், சங்கீதம், பள்ளி மாணவர்க்கான நிகழ்ச்சிகள் போன்ற பல விதங்களில் கருத்துக்கும், செவிக்கும் இனிமை அளிக்கக் கூடிய சேவையை "வானொலி" என்னும் ரேடியோ மக்களுக்குக் கொடுத்தது.

இன்னும் பழைய நினைவுகளில், பி.ஏ.பெரியநாயகி யின் பாடல்கள்!

ஞான சௌந்தரியில் பெரியநாயகியின் பாடல்கள் அவ்வளவு இனிமையாக உருக்கமாக இருக்கும்!

கண்ணன் மேல் பாடிய ஒரு பாடல் "காதலாகினேன்!" என்ற பாடல் நினைவில் இனிக்கிறது!

தமிழ் இசைப்பாடல்கள்...எல்லொரும் கேட்டு மகிழலாம்!

கோபால கிருஷ்ண பாரதியார், கவி குஞ்சர தாஸர், ஊத்துக்காடு வேங்கட கவி, வேத நாயகம் பிள்ளை, பாபனாசம் சிவன், சுத்தானந்த பாரதி, பெரியசாமித் தூரன் போன்றோர்

தமிழ் இசைப் பாக்கள் சிறந்த பாடகர்களால் பாடப் படுகின்றன.

பாரதியாரின் பாடல்கள், இசையோடு கேட்டு மகிழ்கிறோமே!

திருப்புகழ், தேவாரம், திவ்ய பிரபந்தம், சித்தர் பாடல், இவைகளும் இசையோடுப் பாடப் படுகின்றன.

சிலப்பதிகாரப் பாடல்கள் இசையில் ஒலிக்கின்றன.

கர்னாடக சங்கீதம் சிறந்த வித்துவான்களால் இன்றளவும் போற்றப் பட்டு, பாடப் படுகின்றன.

இசையைக் கேட்டு அனுபவிப்பதற்கென்றே விழைகின்ற மக்கள் நிறைய இருக்கின்றனர்.

நாதோபாசனை, கீதோபாசனை இவை மாந்தரை, அவர்தம் உள்ளத்தை உயர்த்துகின்றது!

உன்னத கிருதிகள் இயற்றி மாந்தரை உய்விப்பதற்காக படைத்தளித்த மகான்களை என்னவென்று புகழ்வோம்!

மும் மூர்த்திகள், புரந்தர தாஸர் போன்ற ஆன்றோர் இறை கருணையில் நனைந்து, அருளிச் செய்த கிருதிகள் எக்காலத்தும் உயிர்களை வாழ்விக்கும் அமுதாகும்!

இன்றைய இளைஞர்கள், இளைஞிகள் சங்கீதத் துறையில் வல்லுநர்களாக விளங்குகின்றனர்!

புஷ்பவனம் குப்புசாமி தம்பதியர் நாட்டுப் புறப் பாடல்களில் கர்நாடக ராகங்களை அமைத்து மிக அழகாகப் பாடுகின்றனர்!

கர்நாடக இசைத் துறையில் இன்று திகழ்ந்து விளங்குகின்ற பல இளைய இசை மேதைகள் நமக்குக் கிடைத்தப் பொக்கிஷம்!

3 comments:

Unknown said...

really usefull.....and interesting

Thangamani said...

அன்புள்ள சங்கர்!
உன்கருத்துகளுக்கு என் மனமுவந்த
நன்றி!
நான் உன் வலையை மேலோட்டமாகக் கண்டு களித்தேன்.
அருமை! திருனெல்வேலி,திருச்செந்தூர் கோவில்களைப்
பற்றியும்,குற்றாலம் அருவியைப் பற்றியும், புகைப் படங்களும்,
அழகான விளக்கச் செய்திகளும் சிறப்பு!
கவிதைகள் நயம்!வாழ்த்துகள்!

அன்புடன்,
தங்கமணி.

Thangamani said...

அன்புள்ள சங்கர்!
உன்கருத்துகளுக்கு என் மனமுவந்த
நன்றி!
நான் உன் வலையை மேலோட்டமாகக் கண்டு களித்தேன்.
அருமை! திருனெல்வேலி,திருச்செந்தூர் கோவில்களைப்
பற்றியும்,குற்றாலம் அருவியைப் பற்றியும், புகைப் படங்களும்,
அழகான விளக்கச் செய்திகளும் சிறப்பு!
கவிதைகள் நயம்!வாழ்த்துகள்!

அன்புடன்,
தங்கமணி.