Monday, 1 September 2008

இசையில் இசையும் எல்லாம்!

இசைக்கு மயங்காத உயிர்கள் உண்டோ?

நினைவு தெரிஞ்ச நாளாய் பாட்டுன்னா கேட்கப் பிடிக்கும்.
யாருக்குத்தான் பிடிக்காது?

இருந்தாலும் சொல்லிக் கொள்ளத் தோணுது!

பக்கத்திலே கலியாணம் ஆன ஒரு இல்லத்திலே, வீட்டுக் கூடத்திலே, பொண்ணு, சில சொந்தக்காரப் பெண்கள்.

இவர்கள் பட்டுப் பாயிலே (புதுப் பாயை அப்படி சொல்வது வழக்கம்) அமர்ந்து நோட்டுப் புத்தகத்தில் பாடல்களைப் பாடிப் பார்க்கின்றனர்.

கேட்க மகிழ்ச்சியாய் இருந்தது!

என்கண்ணுக்கு தேவதைகளாய் தெரிந்தனர்!

அந்தப் பாடல்கள்:

ஜங்கார சுதி செய்குவாய்! ஜீவ வீணையில்
சங்கீதாம்ருதம் பெய்குவாய்! ஜகதீஸ்வரனே!


என்ற பாடலும்,

கருணாலய நிதியே!தினமும் உன்சரணாம்புஜம் கதியே!

என்ற பாடலும் கேட்டேன்!

(மாலையில் ஊரழைத்து, பொண்ணு மாப்பிள்ளையை மணையில் அமர்த்தி, எல்லோரும் பாடி , பொண்ணையும் பாடச் சொல்லி, பின்பு குத்துவிளக்கேற்றி, சுற்றி வர பெண்கள் கும்மி அடித்து, ஆரத்தி எடுத்து மகிழ்வர்!)

1950-ஆரம்பத்தில், காற்றுவாக்கில் வரும் பாடல்களையே கேட்கலாம்!

மைக்கிலே, டூரிங் கொட்டகையிலே, இம்மாதிரிதான் பாட்டுக் கேட்டு ரசிக்க முடிந்தது!

சினிமாப் பாடல்கள் நல்லக் கருத்துகள் நிறைந்தும், எழுச்சி ஊட்டக் கூடியதுமாக அமைந்திருக்கும்.

கிராமியமாகவும், கர்நாடக இசையாகவும் ஒலிக்கும்!

(தொடர்கிறது)

No comments: