Wednesday 17 September, 2008

இசை கடல் !

இசை ஒரு கடல்!

அதை அளவிட முடியுமா? காற்றாய், ஒலியாய், வானாய், ஊனில், உயிரில், உள்ளில் நிறைஞ்சிருக்கு!

"இந்த இசையை அனுபவித்து மகிழ்!" என்று இறைவன் மனிதர்களைப் படைத்தான்.

இயற்கையும், இசையை உணர்கின்றது என்பதை அறிஞர்கள் ஆய்வில் காண்கின்றனர்!

இன்றையச் சூழலில், இசை, இளைஞர்களின் வாழ்வில் பெரும் பங்கு பெறுகின்றது!

இளைஞர் நிறைந்த உலகமிது!

மேலைநாட்டு இசையானாலும், கீழைநாட்டு இசையானாலும், அதிலும் லயம், உருக்கம், குரல் (அல்லது) வாத்தியங்களின் இனிமை, பொதிந்துள்ள கருத்துச் செறிவு Iவையனைத்தும்
இளைஞர்களைக் கவர்கின்றன!

இசை மனிதரை புதுப்பிக்கின்றது!

இசை புத்துணர்வு அளிக்கின்றது!

சென்ற ஐம்பதுகளில், சினிமாப் பாடல்கள்....

ஜி. ராமநாதன், கே. வி. மஹாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்ற இசை அமைப்பாளர்களின் உயர்ந்த இசை அமைப்பு மக்களைக் கட்டிப் போட்டது!

இளையராஜா இசையமைப்பு ஒரு வரமாகத் தொடர்கிறது!

என் பெண், மருமகன், பிள்ளைகள், அதிலும் பெரியமகன் (CSR) இளையராஜாவின் பாடலுக்குத் தீவிர ரசிகன்.

கங்கை அமரன் பாடல் எழுதுவதிலும், இசையமைப்பிலும் சிறந்திருந்தார். அவர் பாடல்கள்
சிறுபொன்மணி அசையும்! பூந்தென்றல் காற்றே! வா! இன்றைக்கு யேனிந்த ஆனந்தமோ?

ஏஆர்ரெஹ்மானின் இசையை எல்லோரும் நன்கு ரசிப்போம்!
மார்கழிப் பூவே!, தென்கிழக்குச் சீமையிலே! முன்பே வா! என் அன்பே வா! மலர்களே! மலர்களே! இது என்ன கனவா? விண்ணோடும் மீனாய், கண்ணோடும் மானாய்...

இன்னும் வித்யாசாகர், ஹாரிஸ், பரத்வாஜ், யுவன், தேவா அவரின் வாரிசு ஸ்ரீகாந்த் என்று ஒரு பெரிய பட்டியலே போடலாம்!

இசை கடல் முழங்கி கொண்டே இருக்கும்!

No comments: