Sunday, 21 December 2008

மறக்க முடியுமா?

மறக்க முடியுமா?

தங்கை பிள்ளையின் நிச்சயதார்த்தம்!

மண்டபம் முழுதும், நட்புகள், சொந்த பந்தங்களால் நிறைந்திருக்கிறது!

பொண்ணும் பிள்ளையும் பார்த்துக் கொள்ளாமல், பெற்றோர் பேசி, மணமக்களின் சம்மதத்துடன், நடை பெறப் போகும் திருமணத்தை, நிச்சயிக்கும் அர்த்தமுள்ள மணநிகழ்வு!

மணமகன் திருமணத்துக்குத்தான் வரமுடியும். அமெரிக்காவில் வேலை! (கைபேசிகள் பேசிக் கொள்ளும்!)

பெண் மீனாட்சியாய் அலங்காரத்தில் ஜொலித்தாள்! மதுரைப் பெண்!

நீலப் பட்டுப் புடவையில், ரோஜா மாலையில், அழகு மிளிர்ந்தாள்!

நான் எங்கோ, மண்டப ஹாலில் எல்லோருக்கும் பின்னால் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்!

நிச்சயதார்த்த சம்பிரதாயம் முடிந்து, பெண் மண மேடையை விட்டு வந்து கொண்டிருந்தாள்!

எங்கே வருகிறாள்?

ஆமாம்! என்னை நோக்கி வருகிறாள்!

என்னிடம் வந்து "பெரிம்மா! உங்களுக்கு பாடி காட்டறேன்! அவர் சொல்லியிருக்கிறார்! உங்களுக்குப் பாட்டுன்னா ரொம்பப் பிடிக்குமாமே!"

சொல்லிவிட்டு, என்னை நமஸ்கரித்து விட்டு, நிமிர்ந்தாள்!

நான் அழுதுவிட்டேன்!

அந்த அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லை!

அப்படியே அழுதுவிட்டேன்!

இந்து! ஆமாம் நாட்டுப்பெண் பேர்! மிக அருமையாகப் பாடி அசத்தினாள்!

மனம் குளிரக் கேட்டு மகிழ்ந்தேன்!

இந்த சுவையான தருணத்தை மறக்கமுடியுமா?

2 comments:

ஆயில்யன் said...

//நான் எங்கோ, மண்டப ஹாலில் எல்லோருக்கும் பின்னால் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்!

நிச்சயதார்த்த சம்பிரதாயம் முடிந்து, பெண் மண மேடையை விட்டு வந்து கொண்டிருந்தாள்!

எங்கே வருகிறாள்?

ஆமாம்! என்னை நோக்கி வருகிறாள்!

//

உறவுகள் கொண்டு வரும் எதிர்பார நிகழ்வுகள் என்றுமே சந்தோஷத்தைத்தானே அதிகம் தந்துச்செல்கின்றன!

மணமக்களுக்கு அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள் :)

Thangamani said...

//மணமக்களுக்கு அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள் :)//
அன்புள்ள ஆயில்யனுக்கு!
மணமக்களுக்கு இன்று 2 வயதுப் பெண்குழந்தை
இருக்கிறது!நான்கு வருடம் முன்பு நடந்த சம்பவம்!
அதை எழுத இப்போதுதான் சமயம் கிடைத்தது!
அதை எழுத மறந்துவிட்டேன்! மன்னிக்கவும்.

ஆமாம்! நீங்கள் கூறுவது உண்மைதான்!
உறவுகள் கொண்டுவரும் எதிர்பாரா நிகழ்வுகள்
மகிழ்வைத் தருகின்றன!

அன்புடன்,
தங்கமணி.