Monday, 4 August 2008
எங்கள் ஊர் - தாரமங்கலம் !
சேலம் நகரிலிருந்து 19 மைல் தொலைவில் தாரமங்கலம் என்னும் எங்கள் கிராமம் இயற்கை அழகு நிறைந்து விளங்குகிறது.
கோவில்கள், குளங்கள், பள்ளிகள், ஊருக்கேத் தனி அழகூட்டுகிறது!
கைலாசநாதர் கோவில், சிற்பக் கலையின் அற்புதங்கள் நிறைந்தது! சுற்றுலாத் தலம்!
எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனுமு..!
வருடாவருடம் சிறப்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்து அளிக்கும் தாரைவாழ் செங்குந்தர் மஹாஜன அன்பர்களுக்கு என் மனமுவந்த நன்றியைச் சொல்லிக் கொள்வேன்.
திருவிழா நாட்களில், செவிக்கும், மனதுக்கும் சுவையளிக்கும் சொற்பொழிவுகள், இசைநிகழ்ச்சிகள்!
சிலம்பொலி செல்லப்பா,மா.வே.பசுபதி, சத்திய சீலன், அ.வ.ராஜகோபால், சுகிசிவம், சொ.சொ.மீ.சுந்தரம், அரு.நாகப்பன், இன்னும் பலர்...நினைவு இல்லை.
சீர்காழிகோவிந்தராஜன், மதுரை சோமு, சூலமங்கலம் சகோதரிகள், இன்னும் பலர் இவர்களின் இசைநிகழ்ச்சிகளைக் கேட்டுமகிழ்ந்திருக்கின்றோம்!
சவுணிக்கட்டு எனும் சொல் அன்றாட காய்கறி அங்காடியைக் குறிக்கின்றது. ஹொய்சளர் ஆட்சியினால் (முன்னொருகாலம்) இந்த சொல்இங்கு பேச்சு வழக்கில் வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
'டூரிங் டாக்கீஸ்' சினிமாக் கொட்டகை, எங்கள் ஊரைச்சுத்தியுள்ள கிராமத்துமக்களும் வந்து பொழுதுபோக்காய் கண்டு இரசித்துச் செல்வார்கள்!
எங்கள் ஊரைப் பற்றிய பல இனிய நினைவுகள் இன்னும் உண்டு!
அன்புடன்,
தங்கமணி.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
thuvakame arumai..
"sorkame endraalum athu nam sontha oor pola varumaa......."
azagu thamili.. kortha vaarththaigal...
http://ezilnila.com/tane/unicode_Writer.htm
அன்பு அகிலா!
மிக்க நன்றி! மேலே
தமிழ் இணைப்பு கொடுத்திருக்கிறேன்.
அதில்தமிழில் எழுதிப் பார்
அன்புடன்,
தங்கமணி.
anbuLLa akilaa!
piRandha maNNukku eedu ethu?NanRi.
un valaip puuviRku engaL
vaazththukaL!NiRaiya ezuthu!
anbudan,
thangamani.
அன்புள்ள அம்மா,
பழய நினைவுகளை பதிப்பிப்பதற்கு நன்றிகள்.உன் இளமைக் கால நிகழ்வுகளை, நினைவுகளை,எண்ணக் கோர்வைகளை எழுத்தாய் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு இந்த கணிணி மூலமாக. இந்த உந்துதலை,பயன் படுத்தி ஒரு சிறிய சுய சரிதை போல உன் வாழ்க்கை நீரோட்டதின் சில பல சந்தோஷங்களையும் ஸ்வாரசியங்களையும் பகிர்ந்தளிப்பாயென்றெண்ணுகிறேன்.தொடர்க உன் தமிழ் பயணம்.
அன்புள்ள திலீப்,
உன் பதிவு மகிழ்வைத் தருகிறது!
கோர்வையாக எழுத வரவில்லை.முயற்சி செய்து
எழுத முற்படுவேன்.உன் எழுத்து ஊக்கம் அளிக்கிறது!
மகிழ்ச்சி.சுபா,விக்கி,
உங்கள் அனைவருக்கும் என் அன்புஆசிகள்!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment