Sunday, 25 January 2009

அந்த கருப்பு வெள்ளி !

January 23, 2004...

"அந்த நாளும் வந்திடாதோ "..

எத்தனையோ நாட்களுக்காக , கணங்களுக்காக ஏங்கியதுண்டு..

ஆனால்.. இந்த நாள்..

இன்று நினைத்தாலும்.. உள்ளமும் உடலும் நடுங்கும் நாள்..

ஏன் வந்தது என்று எண்ணி மருகும் ஒரு நாள்..

"வாசலிலே மாக்கோலம்.. வீட்டினிலே லக்ஷ்மிகரம்" என ஊரெங்கும் தை வெள்ளி கொண்டாட்டம் ஒருபுறம்..

புதிதாக கட்டிய அந்த திருமண மண்டபத்தின் முதல் முகூர்த்தம் நெருங்கும் நேரம்..காலை 9.15 மணி..

எங்கும் சந்தோஷ சிரிப்பு, உபசாரம், விசாரிப்புகள்..குதூகலம் உச்சத்தில் இருந்த நேரம்..

வாழ்த்த வந்த முதியோர்கள், விளையாடி திரிந்த மழலை பட்டாளங்கள் ,

களையாய் வளைய வந்த கன்னிகள், பட்டு புடவைகள் சரசரக்க வளையல் சத்தம் மெட்டுபோட..

என எங்கும் சொல்லொன்னா மகிழ்ச்சி வெள்ளம்..

வாத்திய கோஷம் ஒரு பக்கம் முழங்கி கொண்டு இருக்க..

மாங்கல்ய தாரணம் நடக்க சில நிமிடங்களே.. இருந்த அந்த நேரம்..

சிறு தீப் பொறி..பொசுங்க ஆரம்பித்தன.. அலங்கார வண்ண வண்ண காகிதங்கள்..

கண்சிமிட்டும் நேரத்தில்..தற்காலிகமாக போடப்பட்ட கூரை பற்றி எறிய ஆரம்பித்தது..

எங்கும் தீ.. தீ.... தீக்கங்குகள் தான்..

சிரிப்புகள் அலறலாய் மாற.. எங்கும் அழுகையும் .. ஓலமும்..

இருந்ததோ ஒரே வழி..

தப்பிக்க எத்தனித்தனர் வந்திருந்த அத்தனை பேரும்..

இதில் வெளியேர முடிந்தோருக்கு. புது ஜன்மம் அன்று..

முயன்று தோற்றோர்.. முகம் கூட அடையாளம் தெரியவில்லை..


ஒளி இழந்தன பல வீடுகள்..

எத்தனை இழப்புக்கள்..

வார்த்தையால் விவரிக்க முடியாத துக்கம்.. எங்கும்..

என் வீட்டுலும் இருள் சூழ்ந்த நாளது..

உறவிலே என் அன்னையின் தமக்கை..

ஆனால்... என் உள்ளத்தை பொறுத்தவரை என் அன்னைக்கு மேலாக என்னை வழி நடத்தியவள்..

தோழியாய் துணை தந்தவள்..

வாஞ்சையாய் வழி காட்டியவள்..

நல்லதை நயமாக எனக்கு சொல்லி தந்தவள்..

பேரில் மட்டுமல்ல குணத்திலும் அவள் ஒரு சாந்த சொரூபி..
பளிச்சென்ற புன்னகை..

நடமாடும் விவித பாரதியாய்.. மெட்டுக்கள் முணுமுணுக்க.. வேலை பார்க்கும் பாங்கு.. எதை சொல்ல..

"கடவுள் எங்கே?" .. இந்த கேள்வி என் மனதில் திரும்ப திரும்ப கேட்டு சலித்து போய் விட்டேன்..

கனவுகள் பல சுமந்து.. கை கூடும் வேளையில்.. காணாமல் போனதேனோ..???????

."சக்கரை நிலவே..பெண் நிலவே ..
காணும் போதே கரைந்தாயே..
நிம்மதி இல்லை.. ஏன் இல்லை..
நீ.. இல்லையே.."

நீ விரும்பி முணுமுணுத்த ஒரு பாடல்...


உன் இனிமை குரலில் இனி எப்போது கேட்பேன்???????

காலம் உருண்டோடலாம்..

ஆனால்.. என் கண்ணில் இருந்து உருண்டோடும் கண்ணீர் நின்றபாடில்லை..

மிஞ்சி இருப்பது உன் பற்றிய நீங்கா நினைவுகள்..நினைவுகள்..

We miss YOU .. We miss YOU

5 comments:

Unknown said...

அம்மா, ஜீவா சார் பதிவிலிருந்து வந்தேன்... மனம் நெகிழ்ந்து போனது உங்கள் பதிவைப் படித்து. ஸ்ரீரங்க கல்யாண மண்டபம் பற்றிப் படித்த நினைவுகள் எனக்கு வந்தன...

ஏன் என்னும் கேள்விகளுக்குப் பதிலே இல்லை:-( பெரியம்மா உங்க கிட்ட காட்டிய அன்பை உங்க குடும்பத்துக்குக் காட்டிட்டு இருக்கீங்களே, அதுவே போதும். அதைத் தான் உங்க கிட்ட குடுத்துட்டுப் போயிருக்காங்களோ என்னவோ!

அன்புடன், கெ.பி.

Thangamani said...

அன்பு அகிலா!
சாந்தா சித்தியின் இழப்பு சொல்லித் தீருமா?
அந்தக் கருப்பு வெள்ளியன்று...
டி.வி.யில் செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது!
ஸ்ரீரங்கம் கலியாண மண்டபம்..

உன் அம்மாக்குத் தொலைபேசியில் பேசித்...தவித்து...
சாந்தாவை இழந்த அந்தப் பொல்லாத செய்தியில்
நாங்கள் துடித்துப் போனோம்!நீங்கள்
எப்படித் தவித்திருப்பீர்கள்!
சாந்தாவின் கணவருக்கு,பெண்கள்
இருவருக்கும்,நீங்கள் எல்லோரும் ஆறுதல் சொன்னாலும்..
அவர்களுக்குக் காலம்தான் ஆறுதலாகும்!
சாந்தாவின் படம் பார்க்கப் பார்க்க
மனது அழுகிறது!

அன்புடன்,
தங்கமணி.

Geetha Sambasivam said...

படிச்சதும் எனக்கும் ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபம் நினைப்பே வந்தது. என்ன சொல்ல?? எத்தனை நாட்கள் ஆனாலும் தீராத சோகம். :((((((((((((((( காலம் உங்கள் மனப் புண்ணை ஆற்றட்டும்.

Venkat said...

Atthai,

Fire has a unsatiable hunger. how many more lifes should it take? (the biggest yet to come is the 2012 as per Maya calendar) However, I wanted to share with you one more tragedy in our family which was caused by yet another fire.

Chellamani Chitti. You must have heard about all that happened. I had the experience of the last few days of her life and after. I saw her in an isolated room wired with all the tubes and machines. No one was allowed. Chitappa and their son were to stay in the corridor (sitting,, eating, sleeping all in the corridor only)I saw her on a Sunday like this from the entrance of the room. On the Tuesday evening I got a call from Ambi anna (Shekar's brother) that Chitti passed away. I rushed to the hospital. The authorities refused to release the body with out police clearance. Chitappa at that status had already gone to the police station with one of his Son's collegue. the police came at 9.30pm. We got the body released at 10.30 and took it to Govt hospital for clearance. Chitti's body was left at the morge that night and released only on the next day noon. We took her to the burrial ground.I lifted her head and placed it on the bamboo platform and later to the pyre.Her body was damaged to handle it directly and hence the hospital provided a couple of cloth holders to lift the body. There was hesitation to lift the head directly. I went immediately to lift it. I felt wetness and thought her affection for me was oozing thro the wetness. I saw her body lit with the same fire which took her life, now the remains of her also.

Below were my reflections from this experience.

1. What are we doing here? For what purpose? With what confidence we plan for the future? With the highly un predictable life, we carry our own ego, desires, love, hate what not? to what end?

2. Her son came to me and said " Anna, Amma brought up me without knowing anything in the world. What will I do from now?"

3. Chitappa, the most learned and intelligent man in our family, broke down on the loss of his longest relationship in life.

4. How was it decided that Chitti's life would end like this which otherwise would have gone for another 20 years?

5.If this is the karma of her, what is the karma of chitappa and her son?

It leaves me with very profound thoughts..

Thangamani said...

anbuLLa maNi!
chiththi(en manni)yin izappu migavum
thaanga mudiyaathathu!NaangaL maruththuvamanaiyil chiththiyaip paarththhom!Nee samayaththil aNNaavukkum,kuzawthaikaLukkum sapportaaga irundhirukkiRaay!enakku aaRuthalaith tharukinRathu!

'manni(chiththi)yin aanmaa saanthi adaiya
manamaara veNduvom!'

anbudan,
thangamaNi.