தமிழில், வினைச் சொற்கள்... விவசாயம், தானியங்கள்(தவசம்) சம்பந்தமான வினைச் சொற்கள்:
நிலத்தை உழுதல், நீர் பாய்ச்சுதல், விதை விதைத்தல், உரம் இடுதல், களை எடுத்தல், நாற்று நடுதல், அறுவடை செய்தல்,
பரம்படித்தல், பண்படுத்தல், தூற்றுதல், தானியங்களை அரவைமெஷினில் அரைத்தல், அல்லது உரலில் குத்தி புடைத்தல், முறத்தைக் கொண்டு புடைத்தல், குறுணையைக் கொழித்தல், கல்லைத் தரித்தல்,
அரிசியாகி சமையலறைக்கு வந்து அரிச்சிடப்பட்டு, அங்கும் கொஞ்சம் கற்கள் இழி ஏத்தி, கற்கள் நீக்கப் பட்டு, உலையிலிடப்பட்டுச் சோறு ஆகிறது!
நம் உயிர்க்கு உரமளிக்கிறது!
துவரம்பருப்பு, செம்மண்ணினால் கட்டி, வெயிலில் காயவைத்து, எந்திரத்தில் உடைத்தல், கடுகினை நேம்புதல்,(கல்,தூசிநீக்குதல்) இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
Wednesday, 9 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அன்புடையீர்,
இந்திய திரு நாட்டை முன்னேற்ற வேண்டும் ,விவசாயம் செழித்தாலன்றி இது சாத்தியமில்லை , அதற்கு நதி நீர் இணைப்பே நல்ல வழி. நான் சற்று ஆழமாக சென்று மேற்சொன்ன அம்சங்களை சாத்தியமாக்க ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் ஒரு திட்டம் தீட்டி ஐம் டூயிங் மை பெஸ்ட். என் திட்டத்தின் சுருக்கத்தை படிக்க கீழ் காணும் லிங்கை க்ளிக் செய்யவும்
http://kavithai07.blogspot.com/2009/10/blog-post_31.html
Post a Comment