Thursday, 20 November 2008
வாத நாராயண மரத்து 'ஒடக்காண்'
என் குழந்தைப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கையில் தாரமங்கலமென்ற கிராமத்தைப் பற்றியும் அதன் 1970 களின் வாழ்க்கையைப் பற்றியும் எழுத வெண்டியதாகிறது.
எனக்குத் தெரிந்த 'தாரை மா நகர்' என்பது ஒரு சிறிய கிராமம்.
வயல் வெளிகளும் தென்னைத் தோப்புகளும் நிறைந்த பசுமையான இடங்களைத் தவிர சிறிதும் பெரிதுமான சில நூறு வீடுகளையும் ஒரு பெரிய கோவிலையும் மையத்தில் கொண்ட ஒரு அழகான கிராமம்.
(3 டாக்டர்களும் 2 மருந்து கடைகளும் 3 பள்ளிக் கூடங்களும் ஒரு சினிமா கொட்டகையும் கிராம வாழ்க்கையின் அடையாள நிதர்சனங்கள்.)
ஸன்னதி தெரு, அக்ரஹாரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகே எங்கள் வீடு.
எனது 17 வருட வாழ்க்கையிலேயே அந்த வீட்டில் நிறைய மாற்றங்கள்.
மூன்று தென்னை மரங்கள் தேன் கூட்டைக் கலைக்க வைத்த நெருப்பு சாகஸத்தில் இரண்டானது;
முதலியாருக்கு வீட்டின் முன் பகுதியை விற்றபின் வெங்கு மாமாவின் கடையடைத்தது,
பிறகு விற்ற பகுதிக்கு அடையாளமாக எழுப்ப பட்ட என் இடுப்புயர சுவற்றின் மீது நடந்து போன நாட்கள்...
பின் மழை பெய்து மண் கரைந்து போய் அந்த சுவர் என் காலுயரமானது...
நினைத்துப் பார்க்கையில் மழையினாலா அல்லது நான் உயரமானதாலா என்ற குழப்பம் இப்போது.
தென்னை மரங்களுடன் படர்ந்து வளர்ந்த ஒரு வாத நாராயண மரமும் அதில் வசித்த ஒரு 'ஒடக்காண்' குடும்பமும் என் மனதில் இன்றும் பசுமையாக.
(ஓணான் என்றால் 'ஒட்டகம் ஓணான் ஔவையார்' என்பது போல் நல்ல தமிழ் வார்த்தையாகிவிடும். எங்கள் தாரமங்கல தமிழில் அது என்றும் 'ஒடக்காண்' தான்!)
சின்ன வயதில் அந்த ஒடக்காணுடன் நிறைய பகிர்ந்து கொண்டிருக்கிறேன்;
என் சந்தோஷங்களை, என் தோல்விகளை, என் எண்ணங்களையும் ஆசைகளையும் என் பயங்களையும் கிலேசங்களையும் ....
இப்படி எது நான் சொன்னாலும் பொறுமையாக நின்ற இடம் நகராமல் தலையை ஆட்டிக் கேட்டுக் கொண்டிருக்கும் அது!
என் 4 வயதில் பள்ளி ஆரம்பித்த நாட்களில், டீச்சரிடம் திட்டு வாங்கினாலோ, நண்பனிடம் சண்டை போட்டாலோ, மணி படுத்தினாலோ, உஷாவிடம் தகறாரென்றாலோ...
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு விட்டு ஆமோதிக்க நல்ல ஒரு கௌன்ஸில்லர், தெரபிஸ்ட் அந்த ஒடக்காண்!
பாட்டுப் போட்டிக்கு தயார் செய்யவெண்டுமானால், ஓடு தோட்டத்துக்கு!
நல்ல மழையில் வருமே ஒரு 'மெலன்கொலி'- மனக்கிலேசமா...(அது ஒழுகும் கூரையாலா அல்லது மழை வந்தவுடன் தாத்தாவுக்கு பிடிக்கும் 'தண்ணீ பூதத்' தினாலா? அல்லது வெளியில் ஓடியாடி விளையாட முடியாதாலா?) ஒடு வாசலுக்கு..
சொட்டும் மழையில் குளிர்ச் சிலிர்ப்புடன் அந்த ஒடக்காண்.
சில வேளையில் பள்ளியிலிருந்து வீடு வந்தால் காணாமல் போய் விடும் ஒடக்காணைத் தேடி மரம் மரமாய் பார்வையை ஒட்டினால்,
மிகச் சிறந்த 'கேமோFலாஜ் ஆர்டிஸ்டாய்' கண் முன்னாலேயே மறைந்திருக்கும் அந்த நண்பனைப் பார்த்ததும் தான் நிம்மதி வரும்!
பின்னாளில் பாரதியின் கயிற்றைப் பற்றிய வசனக் கவிதையைப் புரிந்து கொள்ள முற்படுகையில் அவரது கற்பனை எனது ஐந்து ஆறு வயதுக்கான 'ஒடக்காண்' கற்பனையை நினைவூட்டியது.
- திப்பிலி.
Labels:
ஒடக்கான்,
தாரமங்கலம்,
திலீப்,
வாத நாராயண மரம்
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
Dhileep,
You still maintain your high "kanaiyaazhi" standard! Hope to get some stories of your school days also as a sequel!
The same feeling I had when read your "Madness" cricket articles also. That's of real British standard!
Keep it up!
Kumar
அன்புள்ள திப்பிலி!
அந்தக் காலத்தை அப்படியே கண்முன்
கொண்டுவந்தாய்!கூடுவா மூலையில் கொட்டும்
மழைநீரைப் பிடிக்க தாத்தா பரபரவென்று பறப்பதை
அண்டா,குண்டா,ஜோடுதவலை,கொப்பரை,
சிறிய தண்ணிதொட்டி எல்லாத்தையும் ரொப்பி(நிரப்பி)க் கொள்ள
வேண்டும்! தண்ணீர் கஷ்டமான அந்த நாளில்,மழை என்பது
போனஸ் அள்ளி கொடுத்தமாதிரி! மழைநீரில் துணிகள் நன்றாய் வெளுக்கும்!
அது ரொம்ப முக்கியம்(பத்திரமா மழை நீரைப்
பாதுகாத்து சிலநாட்கள் உபயோகிக்கணும்)
அருமை! வாழ்த்துகள்!
அன்புடன்,
தங்கமணி.
திப்பிலி,
உங்க ஓடக்காண் நண்பன் .. ரொம்ப super..
akilacsr
நன்றிகள்! சில(15) வருஷங்களாக நல்ல தமிழே (சுஜாதாவின் 'அளதமிள்') படிக்காமல் எழுதாமல் (மெல்லத் தமிழினி சாகுமென்று) இருந்ததனால் எழுத முடியுமோ என்ற பயம் இருந்தது. ஆனால் நீச்சல் போல் கிரிக்கெட் போல் ஆரம்பித்தவுடன் ஒரு இயல்பான உற்சாகம் தானாகவே வருவதற்கு காரணம் 'பெரியசாமி மற்றும் வேலு அய்யாக்களின்' உந்துதல் தரும் (inspirational teaching)பாடங்கள்; மற்றும் புலவியான அம்மாவின் பாதிப்புகள்!
ஊடக வழிவகை செய்து கொடுத்ததற்கு உனக்கு நன்றிகள் குமார்!மகன் தாய்க்காற்றும் தொண்டு!
-திப்பிலி.
Dhileep, It's the vision of Shankar and effort,patience, tolerance of Usha which has given Amma a new dimension of PC-Life, (which we are unable to visualise or give her!) Naam ninaithu pOtra kadavadhu ("Ambi" Vaazhga!)
Kumar!
Dear Dhileep, This reminds me of the letter trails we used to have in our earlier days, perhaps we were bloggin much before they invented it..(remember the kannadathu paingili?) However, "pakkathu veettu Mani" hurt a bit, though my thinking on our relationship was much closure than that, it takes close to 40 years and a blog to learn that it wasn't so...
மாமா பையன் மணி,அடுத்தாத்து மணி, Cousin மணி, என பல வகைகளிலும் எழுதியிருக்கலாம்;பக்கத்து வீட்டு என்ற ப்ரயோகம் நினைத்து தேர்ந்தெடுத்து அலசி ஆராய்ந்து எழுதியதல்ல;எனினும் ஏன் பக்கத்து வீட்டு மணி என்பதற்கான சுயசோதனை செய்ய முற்பட்டால்,எனது 4- 5 வயதில் நம் இருவரின் வாழ்க்கை முறை வேறுபாட்டை நினைத்து பார்த்தால் அப்படி தான் எனக்கு தோன்றியிருக்கிறது.பின்னாளில் வளர்ந்த சிறுவனாய் நினைத்து பார்க்கையில் உன்னைப் பற்றிய எனது எண்ணங்கள் முற்றிலும் வேறு வகையாக மாறியதும் உனது வார்த்தையில் our relationship was much closer than that-என்பதும் உண்மை.
மேற்கொண்டு விவரிக்க சுய சரிதை எழுத வேண்டும்!
By the way,I have taken out the offending adjective!!
Dhileep.
Guys, I didnt know this gets updated so fast. I was thinking blogging was rockete science,(shame, working in an IT org..)This is rocking man, look for more posts from me.One think I need to get on is to post in Tamil, will get that also soon. BTW, Dipip, we have a lot to share to the world, right from our trip to Ooty in the bike to the night we (u,me Hari) spent in the Residency...
http://ezilnila.com/tane/unicode_Writer.htm
மேலுள்ளது தமிழில் எழுத உதவும்.Try this it is very easy to learn.
Dhileep.
யெல்லாமே இப்போ சுலபமாச்சு.BTW, ஜக்கி வசுதேவ் படிச்சிருக்கயா?
http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=13781011
Mani,
- this is the link for
Jaggi vasudev community...
With Love,
Usha Sankar.
Usha, will try that. Have you read "Mystics Musing" I have heard many of his CDs and visited the Velliangiri Dyana lingam too. I feel that he is the guy for the modern crowd who is looking for answers.His words are like lightning and to the point, many times very RAW and primitive also, nevertheless, absolute truth...
Check these URLs. Jaggi sounding like Velupillai Prabhakaran...
http://www.ishafoundation.org/Newsletter/Dec-2008.isa
http://www.ishafoundation.org/Newsletter/Dec-2008.isa
Post a Comment