தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் தன் புதல்வி லக்ஷ்மிக்கு எழுதிய கடிதங்களும்,
நேருஜி அவர்கள் தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களும் பிரசித்திப் பெற்ற நூல்களாகும்.
அனைவரும் படிக்க வேண்டியவை.
கடிதங்கள் வரலாறுபோல் காலத்தை, நிகழ்வுகளை, வாழ்வியல் நடைமுறைகளை உணர்த்துகின்றன.
"இன்னும் இரண்டே வரி!" என்ற கதை போன்ற செய்தி ராணுவக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் உணர முடியும்.
சிறு வயதில் படித்தது.
போர்ப் பாசறையில், ஆணையை மீறி மெழுகுவர்த்தி ஒளியில்
போர் வீரன் ஒருவன் தன் மனைவிக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறான்...
அருகில் ஒரு குரல் "இன்னும் இரண்டு வரி!" எழுது!
"இக்கடிதம் உன்கைக்கு வரும்போது நான் பிணமாகியிருப்பேன்!"
திரும்பவும் திரைக் காட்சியில், கடிதங்கள் பற்றி நிறைய அறியக் கிடைக்கின்றன!
"கிழக்கே போகும் ரயில்" திரைப் படத்தில், காதலர் பரிமாறிக் கொள்ளும் கடிதம்...
ரயிலின் பின்பக்கம்! பாரதிராஜாவின் புதுமைக் கற்பனை!
"குணா" திரைப் படத்தில், காதலன் வசனமாகச் சொல்வதை அழகிய கவிதையாய், காதலி எழுதிப் பாடலாய்ப் பாடுவது கேட்டு ரசிக்கலாம்!
இன்று ஈ-மெயில், எஸ் எம் எஸ் மூலமாக எல்லாவித பரிமாணத்திலும் கடிதங்கள்
அதி துரிதமாகச் செயல் படுகின்றன!
என்ன இருந்தாலும் கைப்பட எழுதும் சொந்தங்களின், நட்புகளின் கடிதங்களுக்கு இணை சொல்ல முடியுமா?
தங்கமணி
Saturday, 22 November 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கணினியெனும் ஊடகமும் இணைய வலை வளர்ச்சிகளின் விளைவாகவும் இன்று நாமெல்லாம் இவ்வளவு சுளுவாக எண்ணங்களையும் இதர வாழ்னிலை நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்ள முடுகிறதென்றாலும் கையால் எழுதும் அனுபவமும் சுகமும் அதைப் படிக்கும்போது உண்டாகும் உணர்வலைகளும் சிறிது சிறிதாய் செத்துக் கொண்டு தான் இருக்கிறது.தபால் காரரின் வரவை எதிர்பார்த்த நாட்களும், வித விதமான எழுதுகோல் முதலான உபகரணங்களும் நம் வாழ்விலிருந்து மெதுவாக மறைந்து கொண்டிருப்பது ஒரு வருத்தம் தான். என் மகனின் ஆரம்பப் பள்ளி நாட்களில் குறைந்தது மூன்றில் ஒரு பங்காவது எழுதி செய்யும் பாடங்களாக இருக்க வெண்டும் என்று பெற்றோர்-ஆசிரியர் குழுமத்தில் வேண்டுகோள் வைத்தது ஞ்யாபகம் வருகிறது.! உலகத்தில் மாறும் காலம் வேகத்திற்கு ஏற்ற படி எழுபதை எட்டிய நீ இவ்வாறு வலைவரைவது (!) ஆச்சரியமூட்டுகிறது! ராஜம் இவ்வாறில்லை,உன் சகோதரிகளோ சகோதரர்களோ உன்னளவு 'enterprising and resourcful' இல்லை என்பது உண்மை!!
- திப்பிலி.
அம்மா..
இன்னும் பழைய கடிதங்களை பரணி ஒழிக்கும் போது எடுத்து படித்து..
நினைவுகளை அசை போடற சுகம் இருக்கே..
எத்தனை mail படிச்சாலும் அந்த postcard and inland லெட்டெர் ல திருப்பி திருப்பி படிக்கிற சந்தோஷம் ...
e-card அனுப்பி wishes சொன்னாலும்., கடை கடையா ஏறி இறங்கி நம்ம மனசுக்கு பிடிச்ச வார்த்தைகள் உள்ள card வாங்கி post பண்ண அனுபவமே தனி தான்..
..
பசுமை நிறைந்த நினைவுகள்..
திரும்பி வராதானு தோன்றது
excellent words of yours ammaa..
அன்புடன்
akilacsr
Post a Comment